டெஸ்ட் போட்டியில் 50 விக்கெட்டுகள் கைப்பற்றி முகமது‌ ஷமி சாதனை

0
139

201607241312279901_Mohammed-Shami-Creates-Records-in-Test-Cricket_SECVPF (1)இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரராக திகழ்பவர் முகமது‌ ஷமி. காயம் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளுக்கு மேலாக விளையாடாமல் இருந்த அவர் தற்போது அணிக்கு திரும்பி முத்திரை பதித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் முகமது ‌ஷமி 66 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். பிராவோ, சாமுவேல்ஸ், பிளாக்வுட், சந்திரிகா ஆகிய முக்கியமான வீரர்களை அவுட் செய்தார்.

3–வது விக்கெட்டை எடுத்த போது முகமது ‌ஷமி டெஸ்டில் 50–வது விக்கெட்டை தொட்டார் தனது 13–வது டெஸடில் 50 விக்கெட் கைப்பற்றி சாதனை புரிந்தார். இதன் மூலம் அதிவேகத்தில் 50 விக்கெட் எடுத்த 2–வது இந்தியரான வெங்கடேஷ் பிரசாத்தை (13 டெஸ்ட்) சமன் செய்தார். பிரசன்னா 50 விக்கெட்டை 12 டெஸ்டில் எடுத்து முதலில் உள்ளார். 25 வயதான முகமது‌ஷமி 13 டெஸ்டில் 51 விக்கெட் எடுத்துள்ளார்.

LEAVE A REPLY