இவ்வாண்டில் மட்டக்களப்புக்கு 44 இளைஞர் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள்: எம்.என். நைறூஸ்

0
155

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

661c597d-f215-4435-bde6-47728d2b4caaஇவ்வாண்டில் மட்டக்களப்பு மாட்டத்துக்கு தலா 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியுள்ள 44 இளைஞர் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என். நைறூஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மேற்கொண்டு வரும் இளைஞர் அபிவிருத்தி மற்றும் சமூக அபிவிருத்திப் பணிகள் குறித்த விவரங்களை அவர் ஞாயிறன்று (ஜுலை 24, 2016) கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த நைறூஸ், குறித்தொதுக்கப்பட்ட இந்த அபிவிருத்தித் திட்டங்களை வெற்றி கரமாக, சிறந்த வேலைத் திட்டமாக நடைமுறைப்படுத்தும் இளைஞர் கழகங்களில் ஒன்று தேசிய ரீதியில் தெரிவு செய்யப்படுமிடத்து அந்தக் கழகத்திற்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இளைஞர்களுக்கான “றியலிற்றி ஷோ” மற்றும் இளைஞர் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் என்பனவற்றிற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கும் இறுதித் தினம் ஜுலை 27 ஆகும்.

எனவே, இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பங்கெடுக்கவுள்ள ஆர்வமுள்ள இளைஞர் கழகங்களும், “றியலிற்றி ஷோ” நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள இளைஞர் யுவதிகளும் தங்களது திட்ட முன்மொழிவுகளை ஜுலை 27 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலத்தில் அல்லது பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலதிக விவரங்களுக்கு மாவட்டக் காரியாலயம் 0652224376 அல்லது மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என். நைறூஸ் 0777874472 தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

LEAVE A REPLY