மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த சேவையாற்றி வரும் பொலிசார் கௌரவிக்கப்பட்டனர்

0
151

(விசேட நிருபர்)

f6a1f677-44a9-453d-885a-ad8ccc7b1e1eபொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் பொலிஸ் திணைக்களத்தில் சிறந்த Nசையாற்றிவரும் பொலிசாரை கௌரவிக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த சேவையாற்றி வரும் பொலிசாரை கௌரவிக்கும் பொலிஸ் வெகுமதி பெருவிழா சனிக்கிழமை(23.7.2016) மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.பி.திணேஸ் கருணாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொடி ஆராய்ச்சி மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் எஸ்.தணஞ்சயன் உட்பட பொலிஸ் அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் திணைக்களத்தில் பல்வேறு துறைகளிலும் சிறந்த சேவையாற்றிய 58 பேர் பணப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

2இலட்சத்து 460425ரூபா பணப்பரிசு இவர்களுக்காக வழங்கப்பட்டன. இதன் போது குற்றத்தடுப்பு, ஊழல் மோசடி தடுப்பு, போதை வஸ்த்து ஒழிப்பு என பல்வேறு பிரிவுகளிலும் சிறப்பாக தமது கடமையை நிறைவேற்றி பொலிஸ் திணைக்களம் மேற் கொண்ட மதிப்பீட்டில் தெரிவு செய்யப்பட்ட 58 பொலிசாருக்கு இதன் போது பணப்பரிசு வழங்கப்பட்டன.

819c9ef6-864c-4180-b44f-f5de00da8a3d

d5224e53-b9ac-4086-85d4-4f8b67101914

de408264-a3ee-427a-8499-e1b14011f39f

f5ee1446-a7b8-4040-8710-3a635010b995

f6a1f677-44a9-453d-885a-ad8ccc7b1e1e

LEAVE A REPLY