காத்தான்குடி கல்மீசான் வீதி கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின்கீழ் புனரமைப்பு

0
130

(M.T. ஹைதர் அலி)

31ce1f88-fad9-41ba-82cc-95c74b7ddefeமட்டக்களப்பு மாவட்டத்தின், காத்தான்குடி பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ள கல்மீசான் வீதியினை புனரமைப்பு செய்வதற்காக கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் அவ்வீதி உள்வாங்கப்பட்டு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேட்கொள்ளபட்டு வருகின்றன. அப்பகுதி மக்களும் அவ்வீதியினை பயன்படுத்துகின்றவர்களும் இவ்வீதியானது பல வருட காலமாக புனரமைக்கப்படாமல் இருப்பதனால் மழை காலங்களில் மழை நீர் தேங்கி நின்று பல்வேறு இடர்களுக்கும், அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்து வருவதாகவும் அதனை புனரமைப்பு செய்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அதனை அடுத்து மக்கள் பங்களிப்புடன் இவ்வீதியினை புனரமைக்க கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் அவ்வீதியானது உள்வாங்கப்பட்டு இத்திட்டம் அமுல்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மோற்கொள்ளப்பட்டு வருவதோடு, இத்திட்டத்திற்காக பத்து லட்சம் ரூபாய் நிதியொதிக்கீடு செய்யப்பட்டு கொங்ரீட் வீதி இடப்பட இருக்கின்றது.

இவ்வீதியானது சிறந்த முறையில் நீர் தேங்கி நிற்காமல் வடிந்தோடக்கூடிய முறையிலும் சிறந்த தரமுள்ள கொங்ரீட் கலவைகள் இடப்பட்டு இவ்வீதி அமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் காத்தான்குடி நகர சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுடன் உரிய இடத்திற்கு களவிஜயமொன்றினை மேற்கொண்டு அதனுடைய நிலைமைகளை எடுத்துரைத்து, அதற்கான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வழங்கினார்.

1a17e42a-0d8a-419b-92b1-2a749d72fa56

70e07ff7-d9b8-421e-b673-728c870f3118

a1bdcd03-7238-4083-a48c-61c4b0e5bc63

c67d47eb-b26c-4c42-b416-3ad53e095058

LEAVE A REPLY