காக்காச்சிவெட்டையில் சோகம்: பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை- சடலங்கள் கிணற்றில் வீசியெறிவு

0
393

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்/ விசேட நிருபர்)

stab-with-knifeமட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு சடலங்கள் கிணற்றில் வீசியெறியப்பட்டிருப்பதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காக்காச்சிவெட்டைக் கிராமத்தைச் சேர்ந்த பேரின்பம் விஜித்தா (வயது 24), பிரசாந்தன் சஸ்னிகா (வயது 18 மாதங்கள்) மற்றும் கந்தையா பேரின்பம் (வயது 56) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இம்மூவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் சனிக்கிழமை நள்ளிரவைத் தாண்டி சற்று நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த நபர் விஜித்தாவையும் அவரது ஒன்றரை வயதுக் குழந்தையையும் வெட்டிக் கொலை செய்து வீட்டுக் கிணற்றில் வீசி எறிந்துள்ளார்.

அயல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கொல்லப்பட்டவரான பேரின்பம் தனது மகளின் அவலக் குரல் கேட்டு ஓடிவந்த பொழது கொலையாளி அவரையும் வெட்டிச் சாய்த்துள்ளார்.

வெட்டப்பட்ட விஜித்தாவின் தந்தையான பேரின்பம் காயங்களோடு குற்றுயிராகக் கிடந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் முன்னதாக சேர்ப்பிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுப்பப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி ஞாயிறு காலை மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பற்றிய துப்புத் தகவல்கள் கிடைத்தள்ளதாகவும் சந்தேக நபரைத் தாங்கள் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரைத் தாம் தேடிவருவதாகவும் பொலிஸார் கூறினர்.

LEAVE A REPLY