ஆப்கானிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலில் பலி 80 ஆக உயர்வு: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

0
147

201607231918576747_61-killed-in-Kabul-blasts-claimed-by-Islamic-State_SECVPFஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தெஹ மஸங் சதுக்கத்தில் சிறுபான்மை ஹசாரா சமூகத்தினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வழிப்பாதை திட்டத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான ஹசாரா சமூகத்தினர் கலந்துகொண்டனர்.

அமைதியாக போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், கூட்டத்திற்குள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதனால் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தனர். ஏராளமானோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலரது கை, கால்கள் சிதைந்தன. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து உயிருக்குப் பயந்து அனைவரும் அங்குமிங்கும் ஓடினர்.

தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. 231 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொது சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாகவும் கூறியுள்ளார்.

தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு சர்வசேத பொது மன்னிப்பு சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘சிலர் கூறுவதுபோல், ஆப்கானிஸ்தானில் சண்டை குறையவில்லை, ஆனால் அதிகரித்துள்ளது. நாட்டில் மனித உரிமைகளுக்கான விளைவுகள் நமக்கெல்லாம் எச்சரிக்கையாக அமைந்துள்ளது’ எனறும்
பொது மன்னிப்பு சபை கூறுகிறது.

இந்த படுகொலை ஆழ்ந்த வேதனை அளிப்பதாக அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார். ‘அமைதியாக போராட்டம் நடத்துவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. ஆனால், சந்தர்ப்பவாத தீவிரவாதிகள் கூட்டத்திற்குள் ஊடுருவி பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பொதுமக்களை கொன்றுவிட்டனர்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY