ஜெர்மனியில் துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி: கொலைகாரன் தற்கொலை

0
105

gun-firing shootingஜெர்மனியின் முனிச் நகரில், துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 9 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவனும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இது குறித்து ஜெர்மன் நாட்டு காவல்துறை கூறுவதாவது, அதிக மக்கள் நடமாட்டம் மிகுந்த முனிச் மாலுக்குள் துப்பாக்கியோடு நுழைந்த ஜெர்மனி-இரானியனான இளைஞன் ஒருவன், பொது மக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான்.

இதில், 9 பேர் பலியாகினர். இறுதியாக அந்த இளைஞன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான் என்று தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் கடந்த ஒரு வாரத்தில் நடக்கும் 3வது அசம்பாவிதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவன் இரட்டைக் குடியுரிமை பெற்றவன் என்பதும், இதுவரை அவன் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY