நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது: தினேஸ் குணவர்த்தன

0
185

Dinesh-Gunawardena-620x330நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மஹிந்த அணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரசின் பொருளாதாரக் கொள்கை தொடர்பில் அவர் கொண்டு வந்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரம் இன்று பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது. மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலவாணி ஒதுக்கம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கைச் செலவு நாளுக்க நாள் உயர்வடைந்து செல்கின்றது.

2016ம் ஆண்டுக்கான நிறைவேற்பற்பட்ட வரவு செலவுத் திட்டம் எதேச்சாதிகார போக்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எதேச்சாதிகார வரியை விதித்து மக்களின் வாழ்க்கைக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிக்கின்றது.

அரசாங்கம் இன்று அடக்குமுறையான வழிமுறைகளை பின்பற்றி ஆட்சி நடத்துகின்றது என தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

-ET-

LEAVE A REPLY