சீனாவில் கனமழைக்கு 100 பேர் பலி: 72 பேரை காணவில்லை

0
101

china_2943611fசீனாவின் வடக்கு பகுதியில் பெய்து வரும் கனமழைக்கு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 72 பேரை காணவில்லை.

கடந்த சில நாட்களாக சீனாவின் வட பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. ஹெனான், ஹுனன் மாகாணங்களில் அதிக உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. தலைநகர் பெய்ஜிங்கும் கன மழையால் கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் சேவை முடங்கியுள்ளது.

கடந்த 3 நாட்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர். 72 பேரை காண வில்லை. 7 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. 2 லட்சத் துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர். பல்வேறு இடங்களில் பாலங்கள் உடைந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது. மின் விநியோகம், செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.1000 கோடி அளவுக்கு பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு அதிகரித்து வருவதால் மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சில நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்திருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிபர் ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டுள்ளார். மீட்புப் பணியில் ஈடுபடாத அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் ஜியாங்சூ, ஜியாங்சி, ஹுபெய், சிச்சுவான் உள்ளிட்ட 10 மாகாணங்களில் பெய்த கனமழையால் 100 பேர் உயிரிழந்தனர். ஒரு மாத இடைவெளியில் சீனாவில் மீண்டும் பேய் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக சீன உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 576 பேர் மழையால் உயிரிழந்திருப்பதாகவும், கடந்த சில ஆண்டுகளில் 4150 பேர் பலியாகி இருப்பதாகவும் தெரிவித் துள்ளது.

சீனாவில் பருவநிலை மாறுபாடு காரணமாக வரலாறு காணாத கனமழை பெய்து பேரிடர்களை ஏற்படுத்தி வருவதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவித் துள்ளனர்.

LEAVE A REPLY