(Photos) காத்தான்குடி பிரதான வீதி மின் விளக்குகளுக்கு நடந்தது என்ன?

0
224

(விஷேட நிருபர்)

IMG-20160723-WA0111காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள ஒரு பகுதி மின் விளக்குகளுக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் காத்தான்குடி பிரதான வீதி இரவு வேளையில் இருளில் மூழ்கியுள்ளது.

இறுதி மூன்று மாதங்களுக்கான மின் பாவனைக் கட்டண நிலுவையினை காத்தான்குடி நகர சபை செலுத்த தவறியதால் இந்த நடவடிக்கையினை கடந்த வியாழக்கிழமை (21) கல்லடி மின்சார சபை மேற்கொண்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதான வீதி மின் விளக்குகளுக்கு மூன்று இணைப்புக்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதில் பிரதான இரு இணைப்புகளுக்குமான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மிகுதி (கபுரடி வீதி தொடக்கம் வரவேற்புப் பலகை-Welcome Board- வரையான) இணைப்புக்கான மின் பாவனைக் கட்டணமாக சுமார் 150.000 ரூபா நிலுவையில் உள்ளது இதுவும் செலுத்த தவறும் பட்சத்தில் எதிர்வரும் நாட்களில் அவ்விணைப்பும் துண்டிக்கப்படும் எனவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் காத்தான்குடி நகர சபை செயலாளர் சர்வேஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்ட போது,

குறித்த மின்சாரப் பட்டியல் கடந்த திங்கட் கிழமையே (20.07.2016) தமக்கு கிடைத்ததாகவும் அதை செலுத்துவதற்குள் மின்சார சபை இணைப்பை துண்டித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நாளை மறுதினம் (25) திங்கட் கிழமை குறித்த தொகை செலுத்தப்பட்ட பின்னர் நிலமை வழமைக்குத் தரும்பும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

IMG-20160723-WA0112 IMG-20160723-WA0113 IMG-20160723-WA0115

LEAVE A REPLY