மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்ஆ மஸ்ஜித்துக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் பெயர்ப்பலகை கையளிப்பு

0
580

(முஹம்மட் பயாஸ்)

WhatsApp-Image-20160722 (1)மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் மஸ்ஜித்துக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு பெயர்ப்பலகை வழங்கி வைக்கப்பட்டது.

அது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் நேற்று (22) நிர்வாகசபையினரிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதுடன் அன்மையில் புதிய நிர்வாகத்தினர் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து இப்பள்ளிவாயல் சில அபிவிருத்திப்பணிகளை கண்டுள்ளது.

பள்ளிவாயல் பூராகவும் காபட் இடப்பட்டு அழகு படுத்தப்பட்டு மட்டக்களப்பில் உள்ள எந்த பள்ளிவாயலிலும் இல்லாதவாறு முற்றிலும் குளிரூட்டப்பட்ட பள்ளிவாயலாக இது புணர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.

இவ் இறையில்லம் மட்டக்களப்பு பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபடும் முஸ்லிம் வர்த்தகர்களினால் பாரபட்சமின்றி பராமரிக்கப்படுவதும் விசேட அம்சமாகும்.

Jamius Salam Jummah Masjid Batticaloaஇவ்வேளைத்திட்டங்களை மீழ்குடியேற்ற புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விஜயமொன்றினை மேற்கொண்டு பார்வையிட்டார்.

இதன் போது புதிய நிர்வாகத்தினரால் இராஜாங்க அமைச்சருக்கு மகத்தான வரவேற்ப்பளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளிவாயலின் சில எதிர்கால வேளைத்திட்டங்கள் தொடர்பாகவும் இராஜாங்க அமைச்சருக்கு நிர்வாகத்தினரால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதே வேளை இப்பள்ளிவாயலின் அபிவிருத்திப்பணிகளுக்காக இராஜாங்க அமைச்சர் ஆரம்ப காலங்களில் நிதி ஒதுக்கீடு செய்து அபிவிருத்திப்பணிகளை ஆரம்பித்து வைத்தமை நிர்வாகத்தினரால் நினைவு படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

WhatsApp-Image-20160722 (1) WhatsApp-Image-20160722 (3)

LEAVE A REPLY