பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்து; ஏறாவூர் முஹம்மது இப்றாஹிம் படுகாயம்

0
204

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

accident0மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையில் சந்திவெளி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளோட்டி படுகாயமடைந்து சந்திவெளி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (23) சனிக்கிழமை பொழுது புலரும் தறுவாயில் இச்சம்பவம் இடம்பெற்றது.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் ஓட்டமாவடியில் இருந்து ஏறாவூர் நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஏறாவூர் முதலாம் குறிச்சியைச் சேர்ந்த முஹம்மது தம்பி முஹம்மது இப்றாஹிம் (வயது 58) என்பவர் படுகாயமடைந்து சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY