ஓகஸ்ட் மாதம் 01ம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ள நிலையில் புதிய கட்டண விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி அதிவேக நெடுஞ்சாலையில் மஹரகமவில் இருந்து காலி வரை 390 ரூபாவும், மஹரகமவில் இருந்து மாத்தறை வரை 470 ரூபாவும், கடுவலயில் இருந்து மாத்தறை வரை 490 ரூபாவும் அறவிடப்பட உள்ளன.
அத்துடன் சாதாரண பஸ் சேவையில் குறைந்த கட்டணமாக இருந்த 08 ரூபா 09 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏனைய கட்டண விபரங்கள் மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளன.