கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின்கீழ் காத்தான்குடி அராபிக் கலாசாலை வீதிக்கான வடிகாண் மூடி இடல்

0
153

(M.T. ஹைதர் அலி)

4காத்தான்குடி பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள அரபிக் கலாசாலை வீதியானது பிரதான வீதிகளில் ஒன்றாகும். அவ்வீதியின் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் வடிகானின் மூடிகள் உடைந்தும், சிதைவடைந்தும் காணப்படுகின்றமையினால் அவ்வீதியினை பயன்படுத்தி வருகின்ற மக்கள் மிக நீண்ட காலமாக பல்வேறு இடர்பாடுகளுக்கும், இன்னல்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர் .

இவ்வீதியில் அமையப்பெற்றுள்ள சீரற்ற வடிகான் மூடிகளின் காரணமாக அவ்வீதியினால் பயணிக்கும் மக்கள் பலர் பல்வேறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், அவ்வீதியால் துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், சிரிய, பெரிய வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலைமையில் காணப்படுவதாகவும், அதன் மேலாக வாகனங்கள் செல்லும் போது பாரிய அளவிலான சத்தம் கேட்பதால் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு பாரிய அசௌகரியத்தினை உண்டு பண்ணுவதாகவும், இவ்வீதியினை சீர்செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தனர்.

9இதனையடுத்து மக்கள் ஆதரவுடன் இவ்வீதியினை சீர் செய்வதற்காக கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் அவ்வீதி உள்வாங்கப்பட்டு இத்திட்டம் அமல்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மோற்கொள்ளப்பட்ட வருவதோடு, இத்திட்டத்திற்காக கிராமத்திற்கொரு வேலைத்திட்டத்தினூடாக பத்து லட்சம் ரூபாய் நிதியொதிக்கீடு மேற்கொள்ளப்பட்டு 280 வடிகான் மூடிகள் இடப்பட இருக்கின்றன.

இவ்வீதி எவ்வாறு சீர்செய்யப்பட வேண்டும், கான் மூடிகள் எவ்வாறு சிறந்த தரத்தில் தயாரிக்கப்பட வேண்டும், அதனை எவ்வாறு வடிகாலின் மேல் சரியான இடத்தில் சரியான முறையில் இடப்பட்ட வேண்டும் என்று காத்தான்குடி நகர சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுடன் உரிய இடத்திற்கு களவிஜயமொன்றினை மேற்கொண்டு அதனுடைய நிலைமைகளை எடுத்துரைத்து, அதற்கான ஆலோசனைகளையும் , அறிவுரைகளையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வழங்கினார்.

1 2 6 10 11

LEAVE A REPLY