ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் வருடாந்த உயர்தர மாணவர் வெளியேற்று விழா-2016

0
238

(ஓட்டமாவடி அஸ்பாக்)

Sehu Ali ZDEஓட்டமாவடி தேசிய பாடசாலையின் உயர்தர கணித, விஞ்ஞான மற்றும் கலை, வர்த்தகம், தொழில்நுற்ப துறைகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் பிரியாவிடை நிகழ்வு நேற்று (22) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயககல்விப் பணிப்பாளர் எம்.ஜ. சேகு அலி, அவருடன் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட்ட விரிவுரையாளர் எம்.ரி.எம் றிஸ்வி, பாடசாலையின் அதிபர் எம்.எல்.ஏ ஜூனைட், பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியயைகளும் கலந்து கொண்டனர்.

இதன் போது இம்முறை உயர்தர பரீட்சை எழுதும் மாணவ மாணவிகளுக்கு நினைவுச் சின்னமும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு பாடசாலையின் உயர்தர மாணவர் ஒன்றியம் 2017 பிரிவு மாணவர்கள் மற்றும் அவ்வென்றியத்திற்கு பொறுப்பான எம்.எம். நவாஸ் ஆசிரியரின் வழிகாட்டலில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

event 1 event 2 event 3

LEAVE A REPLY