அசாரூதின் சாதனையைச் சமன் செய்த விராட் கோலி!

0
120

virat kohli33மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் அபாரமாக ஆடிய விராட் கோலி 134 பந்துகளில் சதம் எடுத்தார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 6 ரன்கள் எடுத்தபோது டெஸ்ட் போட்டியில் 3 ஆயிரம் ரன்களை எட்டினார் கோலி. இந்த மைல்கல்லை எட்டிய 19-வது இந்தியர் கோலி ஆவார். அதேநேரத்தில் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை எட்டிய இந்தியர்கள் வரிசையில் 8-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது கோலிக்கு 42-வது டெஸ்ட் போட்டியாகும்.

டெஸ்ட் கேப்டனான பிறகு அவர் எடுத்த 5 சதங்களும் இந்தியாவுக்கு வெளியே எடுத்தவைதான். இந்தியாவுக்கு வெளியே அதிக சதங்கள் எடுத்த இந்திய கேப்டன் அசாரூதின். 5 சதங்கள் (41 இன்னிங்ஸ்கள்). அந்தச் சாதனையை 12 இன்னிங்ஸ்களில் சமன் செய்துள்ளார் கோலி.

LEAVE A REPLY