டெஸ்டில் 3000 ரன்னைக் கடந்த விராட் கோலி

0
200

201607221752348564_Virat-Kohli-Reached-3000-runs-and-gets-12-century_SECVPFஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பெட்டிங் தேர்வு செய்தது. தவான், விராட் கோலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 84 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

விராட் கோலி சதம் அடித்து 143 ரன்னுடன் களத்தில் உள்ளார். விராட் கோலி 6 ரன்னைக் கடக்கும்போது 42 டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்னைக் கடந்தார்.

மேலும், சதம் அடித்ததன் மூலம் தனது 12-வது சதத்தை பதிவு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் இதுவாகும். விராட் கோலி மொத்தம் 12 சதங்கள் அடித்துள்ளார். இதில் 9 சதங்கள் வெளிநாட்டு மண்ணில் அடித்ததாகும்.

2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா மண்ணில் அடிலெய்டில் முதல் சதத்தை பதிவு செய்தார். 2-வது சதத்தை ஆகஸ்ட் மாதம் பெங்களூரில் நியூசிலாந்துக்கு எதிராக அடித்தார். டிசம்பர் மாதம் நாக்பூரில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்தார்.

2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சென்னையி்ல் சதம் அடித்தார். டிசம்பர் மாதம் ஜோகன்னஸ்பர்கில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக சதம் அடித்தார்.

2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியூசிலாந்திற்கு எதிராக வெலிங்டனில் சதம் அடித்தார்.

2014-15-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் நான்கு சதங்கள் விளாசினார். இதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலேயில் நடைபெற்ற டெஸ்டில் இலங்கை அணிக்கெதிராக சதம் அடித்தார்.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக சதம் அடித்துள்ளார்.

இதன்மூலம் வெளிநாட்டு மண்ணில் மட்டும் 9 சதங்கள் (ஆஸ்திரேலிய மண்ணில் 5, நியூசிலாந்தில் 1, இலங்கையில் 1, தென்ஆப்பிரிக்காவில் -1, வெஸ்ட் இண்டீசில் 1) அடித்துள்ளார்.

LEAVE A REPLY