கசந்த மாளிகை

0
248

(Mohamed Nizous)

“என் தேவதைக்காக நான் கட்டியிருக்கும் இந்தப் பில் கட்டணங்களைப் பார்…!

என் உள்ளத்திலே படர்ந்த முல்லைக்கொடிக்கு நான் அமைத்திருக்கும் இந்த கள்ள கடவுச் சீட்டைப் பார்…

என் இதய சாம்ராஜ்யத்தலைவியின் ஆட்சி ஆரம்பமாகப் போகும் அந்த அரபியின் சமையலறையைப் பார்…

என் கண்களைத் திறந்து விட்டவள் காலமெல்லாம் களித்திருக்க நான் விமான டிக்கட்டுக்கு கட்டிய credit cardஐப் பார்…

வானத்து நிலா நீராட இறைவன் மேகத்தைப் படைத்தான்…
என் வாழ்வின் நிலா நீ நீராட நான் இந்த வாளியை வாங்கினேன்.

இது இறந்து போன ராணிக்காகக் கட்டப்பட்ட தாஜ் மஹால் அல்ல…

உயிரோடு இருப்பவளுக்காக கட்டப் பட்ட ‘தாஜா’ மஹால்.

இது சமாதி அல்ல; சமாளி…

ஆண்டவன் மட்டும் எனக்குப் பறக்கும் சக்தியைக் கொடுத்திருந்தால்…
ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் அத்தனை பிளைட்லயும் உன்னை வெளிநாட்டுக்கு ஹவுஸ்மெய்ட்டாய் அனுப்பியிருப்பேன் லதா.

வானத்து நிலவையும் உன் தந்தையிடம் சீதனமாய்ப் பெற்று இந்த கசந்த மாளிகைக்கு வண்ண விளக்காக அமைத்திருப்பேன் லதா.

என்ன செய்வது…? அந்த மனுசன் இல்லையே..உயிரோட இல்லையே…..!

LEAVE A REPLY