திருகோணமலை மாவட்டத்தின் சில கிராமங்களில் இன்னும் மீள் குடியேற்றப்பட வேண்டும்: அன்வர்

0
168

(M.T. ஹைதர் அலி/அகமட் இர்ஷாத்)

2e267307-9bc2-478d-a5d6-63fa561fe34dதோப்பூர் பிரதேசத்தில் கள்ளம்பத்தை கிராமம் 10 வீட்டுத்திட்டம் மற்றும் செல்வநகர் நீனாகேணி பகுதி கிண்ணியா பிரதேசத்தில் கண்டலடிஊற்று பூவரசன் தீவு, சூரன்கள், குரங்குபாஞ்சான், மஜீத் நகர், உப்பாறு/கண்டல் காடு வெள்ளைமணல் சின்னப்பிள்ளைச் சேனை மாபிள் கடற்கரை அண்டிய குடியிருப்பு பொதுமக்களின் காணிகளில் படையினர் இன்னும் நிலை கொண்டமை நிலாவெளி இக்பால் நகர் குச்சவெளி குச்சவெளி தட்டக்கல் பகுதியிலுள்ள கடற்படையினர் கைவசமுள்ள ஒரு ஏக்கர் காணி இலந்தைகுளம் 5 ம் கட்டை பகுதி துவரங்குளம்,பெரியகுளம் அணைக்கட்டுப்பகுதி, புளியலடி கண்டல் இலந்தைக்குளம், சமணங்குளம் போன்ற பகுதிகளில் உள்ள வயல் காணிகள் புடவைக்கட்டு சுனாமி வீட்டுத்திட்ட மையவாடி பிரதான வீதியில் அமைந்துள்ள கடற்படை தளம் ஆக்கிரமிப்பு புல்மோட்டை பிரதேசத்தில் கரையாவெளி பட்டிக்குடா மண்கிண்டிமலை அறிசிமலை தேதவடிதீவு புல்மோட்டை 13,14 ம் கட்டைபகுதிகள் போன்ற குடியிருப்புக் காணிகளில் இன்னும் படையினர் யுத்தம் முடிவடைந்தும் பொது மக்களிடம் ஒப்படைக்காமை அவ்வாறு விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயம் செய்ய முடியாத நிலைமை வன பரிபாலன திணைக்களத்தினர் இதுவரையும் தடுத்து வைத்திருப்பது குறித்த மக்களின் வாழ்வாதார பாதிக்கபட்ட நிலையில் அவைகள் விடுவிக்க வேண்டும் எனவும் மாகாண சபை உறுப்பினர் 2016.07.21ஆந்திகதி மாகாண சபை அமர்வில் அன்வர் உரையாற்றினார்.

தொடர்ந்து அவரது தனி நபர் பிரேரணையை ஆதரித்து மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தி ஏனைய உறுப்பினர்கள் தமது பிரதேச காணிப் பிரச்சினைகளையும் முன்வைத்தனர் குறித்த பிரேரணையின் போது கிழக்கு மாகாண காணி அமைச்சர் ஆரியவதி கலப்பதி அவர்கள் கடந்த ஜூன் மாத அமர்வின் போது அன்வரால் கொண்டு வரப்பட்ட இது தொடர்பான விவாதத்தின்போதும் குறித்த நேரத்திற்கு வருகை தராமல் இருந்ததோடு அது போன்று நேற்றைய பிரேரணையின் போதும் அவர் குறித்த நேரத்தில் சபையில் இல்லாதது குறித்து சபாநாயகரிடம் அன்வர் கேள்வி எழுப்பினார்

குறித்த பிரச்சினைகள் உறுப்பினர்களால் கொண்டு வரப்படுகின்ற பொழுது இவ்வாறு அமைச்சர் ஓடி ஒழிவது தமக்கு சந்தேகத்தை தோற்றுவதாக குறிப்பிட்ட அன்வர் அமைச்சர் ஆரியவதியின் செயற்பாடு இந்த மாகாண மக்களுக்கு செய்கின்ற ஒரு அவ கௌரவமான செயல் மட்டும் அல்லாது இவ்வாறான அமைச்சர்கள் இந்த மாகாண சபைக்கு தேவையா என்று சபையை பார்த்து கேட்டார் எதோ அமைச்சர் திட்டமிட்டு முஸ்லிம்களின் காணி விடயத்தில் நடப்பது புலனாகிறது என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY