ஊக்கமருந்து விவகாரத்தில் மேலும் 45 பேர் சிக்கினார்கள்: ஐ.ஓ.சி. அதிர்ச்சி

0
91

201607222019566529_IOC-reveals-45-new-doping-failures-from-Beijing-London-Games_SECVPFபீஜிங் (2008) மற்றும் லண்டனில் (2012) நடைபெற்ற ஒலிம்பிக்கின்போது வீரர்கள் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் குறிப்பிட்ட வீரர்கள்- வீராங்கனைகளுக்கு மீண்டும் பரிசோதனை நடத்த சர்வதேச ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்தது.

அதன்படி மறுபரிசோதனையில் ஏராளமான வீரர்கள் சிக்கினார்கள். குறிப்பாக ரஷியாவைச் சேர்ந்த பல தடகள வீரர்கள்- வீராங்கனைகள் சிக்கினார்கள். இந்நிலையில் தற்போது புதிதாக 45 பேர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கண்டறியப் பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

பீஜிங்கில் கலந்து கொண்டவர்களிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளில் பதக்கம் வாங்கிய 23 பேர் உள்பட 30 பேர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இவர்கள் எட்டு நாடுகளில் இருந்து நான்கு போட்டிகளில் கலந்து கொண்டவர்கள்.

மற்றொரு சோதனை லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட 138 பேரின் மாதிரிகள் மீண்டும் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் இரண்டு போட்டிகளில் கலந்து கொண்ட 9 நாடுகளைச் சேர்ந்த 15 பேர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

இதனால் இதுவரை பீஜிங் (2008) மற்றும் லண்டனில் (2012) நடைபெற்ற ஒலிம்பிக்கின்போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக 98 பேர் கண்டறியப் பட்டுள்ளனர்.

இதற்கிடையே ஊக்கமருந்து விவகாரத்தில் ரியோ ஒலிம்பிக்கில் இருந்து ரஷியாவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுகுறித்து 24-ந்தேதி சர்வதேச ஒலிம்பிக் சங்கம் இறுதி முடிவு எடுக்க உள்ளது.

LEAVE A REPLY