(Photo) இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி மற்றும் மண்முனை வடக்கு பகுதிகளுக்கு 4 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் கையளிப்பு

0
11

(முஹம்மட் பயாஸ்)

2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து  காத்தான்குடி மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரவுட்குட்பட்ட சங்கங்கள், பொது நிறுவனங்கள், கழகங்கள், மதஸ்தலங்களுக்கு தேவையான 4 மில்லியன் ரூபா பொறுமதியான உபகரணங்கள் இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டன.

மண்முனை வடக்கு பகுதிக்கான உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மண்முனை வடக்கு பிரேதச செயலகத்தில் இடம்பெற்றது.மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தார்.அத்துடன் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 35 பொது நிறுவனங்களுக்குத் தேவையான உபகரணங்கள் காத்தான்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலளார் றுஸ்வின் மொஹமட் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள்,முன்னாள் கா.குடி நகர பிதா SHM.அஸ்பர்JP,முன்னாள் மாகானசபை உறுப்பினர் பரிட்JP, உதவி பிரதேச செயளாலர் அப்கர் அஹமட் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

1d2c1191-86d8-4ae9-8def-2677f4e21d48

3a57d51f-6b39-4b66-8e58-c024b03c6373

16c39be6-b92b-4ad3-b029-f7af5ebe3c7e

306ccc69-fd14-4eee-a7a9-c3f5a703b595

e90bd1c5-fe17-40ae-a8ff-57d6d2b6a474

e2547cb7-5b81-4305-a063-90b8c1162170

a713481b-f5cf-4ba5-a4d8-18cf7c74bbd9

LEAVE A REPLY