கல்கிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு இளைஞர் பலி

0
100

gun-firing shootingகல்கிஸ்ஸ, சில்வெஸ்டர் வீதி பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (21) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

அவருடைய வீட்டிற்கு சுமார் முன்னூறு அல்லது நானூறு மீற்றர் தூரத்தில் இந்த துப்பாக்கி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

#Adaderana

LEAVE A REPLY