அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் உட்பட 50 பேர் முகாவில் இணைவு!

0
181

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

DSC_6157கல்குடாத் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் உட்பட 50 பேர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டுள்ளதாக மு.கா. பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கல்குடாத் தொகுதியைச் சேர்ந்தவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், வாழைச்சேனை காகித ஆலையின் தவிசாளருமான அன்வர் நௌஷாத் தனது ஆதரவாளர்கள் சகிதம் நேற்று (21) வியாழக்கிழமை மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கொண்டார்.

கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் கேட்போர் கூடத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த அன்வர் நௌஷாத் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் முன்னிலையில் தாம் முகா வில் இணைந்து கொண்டுள்ளதாக அறிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், ஷிப்லி பாறூக், ஏ.எல். தவாம், எச்.எம். லாஹிர், ஆரிப் சம்சுதீன் ஆகியோரும் உடனிருந்தனர்.

அங்கு இடம்பெற்ற நிகழ்வில் கட்சியில் இணைந்து கொண்டவர்களை வரவேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.கா.வின் வெளிப்படைத் தன்மைக்கும் அதன் செயற்திறனுக்கும் மாற்றுக் கட்சி உறுப்பினர்கள் மு.கா.வில் வந்து இணைந்து கொள்வது சிறந்த உதாரணம் என்றார்.

DSC_6123 DSC_6125 DSC_6146 DSC_6154

LEAVE A REPLY