பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து காத்தான்குடி, மண்முனை வடக்கு பகுதிகளுக்கு 4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

0
106

f45e76ad-65d3-437e-8ca7-3438b10f36002016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து காத்தான்குடி மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரவுட்குட்பட்ட சங்கங்கள், பொது நிறுவனங்கள், கழகங்கள், மதஸ்தலங்களுக்கு தேவையான 4 மில்லியன் ரூபா  பொறுமதியான உபகரணங்கள் நாளை வெள்ளிக்கிழமை கையளிக்கப்படவுள்ளது.

மண்முனை வடக்கு பகுதிக்கான உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மண்முனை வடக்கு பிரேதச செயலகத்தில் நடைபெறவுள்ளது. பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

அத்துடன், நாளை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 35 பொது நிறுவனங்களுக்குத் தேவையான உபகரணங்கள் கையளிக்கப்படவுள்ளது. காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளதுடன், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலளார் றுஸ்வின் மொஹமட் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

LEAVE A REPLY