மத்திய தரைக்கடலில் அகதிகள் படகில் 21 பெண்கள் பலி

0
92

201607211731478324_21-women-one-man-found-dead-on-migrant-boat-near-Libyan_SECVPFஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து ஏராளமான அகதிகள் படகில் மத்திய தரைக்கடலை தாண்டி சென்று ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருகிறார்கள்.

இவ்வாறு நைஜீரியா மற்றும் சிசிலி நாடுகளை சேர்ந்தவர்கள் ஒரு படகில் மத்திய தரைக்கடலில் இத்தாலியை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

லிபியா அருகே சென்ற போது சர்வதேச மருத்துவ கண்காணிப்பு குழுவினர் அங்கு வந்தனர். அவர்கள் அந்த படகை மடக்கி சோதனையிட்டனர். அந்த படகின் கீழ் தளத்தில் 21 பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

இந்த படகில் 50 குழந்தைகள் உள்பட 209 பேர் பயணம் செய்தனர். அவர்கள் அனைவரையும் மருத்துவ குழுவினர் மீட்டனர்.

22 பேரும் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. படகில் இருந்த டீசலில் தண்ணீர் கலந்து அதன் மூலம் ஒரு வித நச்சு வாயு பரவியபடி இருந்தது. எனவே, அதனால் ஏற்பட்ட மூச்சு திணறலில் அவர்கள் இறந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஆனால், ஒரு சில பெண்கள் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன. எனவே, இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. சாவுக்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY