கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு அரசினால் அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு ஜூலை மாதத்திலிருந்து வழங்கப்படும்: ஹாபிஸ் நஸீர் அஹமட்

0
139

(எம்.ஜே.எம்.சஜீத்)

Naseer Hafisகிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு அரசினால் அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு இவ்வருடம் ஜூலை மாதத்திலிருந்து வழங்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உறுதி.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு அரசினால் அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு இவ்வருடம் ஜூலை மாதத்திலிருந்து வழங்கப்படும் என கிழக்கு மாகாண சபையிலே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உறுதியளித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை அமர்வு தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் (21) நடைபெற்ற போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரனைக்கு பதிலளித்து உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நமது நாட்டிலுள்ள மாகாண சபைகளின் கௌரவ உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முகாமைத்துவ உதவியாளர்களுக்கு அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட சம்பள கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றன, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர், தவிசாளர், கௌரவ அமைச்சர்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு மட்டும் அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு வழங்கப்பட்டும் கௌரவ கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு இதுவரையும் அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை, கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு வழங்கப்படுவதற்கான அனுமதி கௌரவ கிழக்கு மாகாண ஆளுனரால் வழங்கப்பட்டுள்ளது.

மிக விரைவில் கௌரவ மாகாண சபை உறுப்பினர்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக கௌரவ முதலமைச்சரினால் சென்ற 21.06.2016ம் திகதி நடைபெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டும் இதுவரை இச்சம்பள கொடுப்பனவு வழங்கப்படவில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் மேற்படி பிரேரனை கிழக்கு மாகாண சபை அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்படி உறுதியளித்தார்.

LEAVE A REPLY