(Photo) காத்தான்குடி வர்த்தக நிலையங்களில் காலவாதியான மற்றும் லேபல் இடப்படாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

0
14

(விசேட நிருபர்)

1a3ccd95-1f51-47fd-90d9-bc566299dde4காத்தான்குடியிலுள்ள வர்த்தக நிலையங்களில் காலவாதியான மற்றும் லேபல் இடப்படாத உணவுப் பொருட்களை கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இன்று (21) காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள நான்கு வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்ட போது இந்த உணவுப் பொருட்கள் மற்றும் தீண் பண்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் ஆலோசனையின் பேரில் காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் கே.சத்தியநானந்தன், மற்றும் பொதுச் சுகாதர பரிசோதகர்களான ஏ.மிதுன்ராஜ், ஜே.ஜெயனிகாந் ஆகியோர் மேற்கொண்ட இந்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது லேபலிடப்படாத சுவிங்கியம், மற்றும் இனிப்புடன் கூடிய தீண் பண்டங்கள் என்பவைகளும் போலி லேபல் இடப்பட்ட கொர்க்காப்புளி, அஜினமோட்டோ போன்ற உணவுப் பொருட்கள், காலவதியான தீண்பண்டங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு லேபலிடப்படாத தீண்பண்டங்கள் என்பவைகளை கைப்பற்றியுள்ளனர்.

இந்தப் பொருட்களை வைத்திருந்த நான்கு வர்த்தகர்களுக்க எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நாளை (22) வெள்ளிக்கிழமை வழக்கு தொடரவுள்ளதாக காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

2ba499a5-2432-475c-915b-ca506017ce5f

9c8aca74-e3db-4896-9cbd-cfc86e8993cc

80deced6-4872-4187-bdfe-bca9b10215b7

668d0ebe-ed49-4c29-841b-23bae94cdbfa

c73b7ca0-1d69-4d2f-87e0-79c4771f375c

LEAVE A REPLY