சீனாவில் பாலத்தில் விமானம் மோதி 5 பேர் பலி

0
151

shot20நீரிலும் வானத்திலும் செல்லக்கூடிய சீனாவின் ஆம்பிபியன் விமானம் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

சீனாவின் அரசு விமான சேவை நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏ.வி.ஐ.சி., ஜாய் ஜெனரல் ஏவியேசன் நிறுவனம், நீரிலும் வானத்திலும் செல்லக்கூடிய ஆம்பிபியன் விமான சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்காட்டியதையடுத்து, விமான சேவையை துவங்குவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து ஷாங்காயின் ஜின்ஷான் மாவட்டத்திலிருந்து 10 பேருடன் ஜோஷான் நகருக்கு புறப்பட்ட ஆம்பிபியன் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எதிர்பாராதவிதமாக பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 4 பேர் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

LEAVE A REPLY