வடிகானுக்கள் ஹோட்டல் கழிவு நீரை விட்ட இரண்டு ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எதிராக தண்டப்பணம் விதிப்பு: காத்தான்குடியில் சம்பவம்

0
165

(விசேட நிருபர்)

29b83c73-24a0-4ca6-8ac1-a41c3dbe5feeகாத்தான்குடி நகர சபை பிரிவில் வடிகானுக்குள்  ஹோட்டல் கழிவு நீரை விட்டு வடிகானை அசுத்தப்படுத்திய இரண்டு ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எதிராக காத்தான்குடி நகர சபை தண்டப்பணம் விதித்துள்ளதாக காத்தான்குடி நகர சபை உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதனா வீதியிலுள்ள இரண்டு பிரபல ஹோட்டல்களின் கழிவு நீர் காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள வடிகானுக்குள் ஓடவிட்டதால் வடிகான் அசுத்தமடைந்து துர் நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக பாதசாரிகள் மற்றும் பொதுமக்கள் சிலர் காத்தான்குடி நகர சபைக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து குறித்த இரண்டு ஹோட்டல்களும் தண்டப்பணமாக தலா ஒரு ஹோட்டலுக்கு 20,000 ரூபா செலுத்துமாறு காத்தான்குடி நகர சபையினால் நேற்று (20) புதன்கிழமை தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக காத்தான்குடி நகர சபை உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து இந்த தண்டப்பணத்தை ஹோட்டல் உரிமையாளர்கள் செலுத்தியுள்ளனர்.

மேற்படி ஹோட்டல்களின் கழிவு நீரை பிரதான வீதி வடிகான்களுக்குள் விட்டதால் டெங்கு நுளம்பு பெருகும் நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக நகர சபை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

மேற்படி வடிகான்களில் ஏற்பட்ட அசுத்தம் நிறைந்த கழிவு நீர் மற்றும் ஏனைய கழிவுப் பொருட்கள் இன்றைய தினம் காத்தான்குடி நகர சபையின் சுகாதார ஊழியர்களினால் துப்பரவு செய்யப்பட்டது.

de8db7f7-cce9-4d7a-a2d7-0de5e87ed7f4

LEAVE A REPLY