இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் நிதியொதுக்கீட்டில் காத்தான்குடியிலுள்ள சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் பள்ளிவாயல்களுக்கான அலுவலக உபகரணங்கள்

0
102

(விசேட நிருபர்)

Hizbullahமீள் குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வின் நிதியொதுக்கீட்டில் காத்தான்குடியிலுள்ள சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் பள்ளிவாயல்களுக்கான அலுவலக உபகரணங்கள் நாளை(22.7.2017) காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்படவுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.சிவராசா தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மிலின் தலைமையில் நடைபெறும் இந்த வைபவத்தில் மீள் குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 16இலட்சத்து 5000 ரூபா நிதியொதுக்கீட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்த உபகரணங்கள் காத்தான்குடியிலுள்ள பாலர்பாடசாலைகள், மற்றும் பள்ளிவாயல்கள் விளையாட்டுக்கழகங்கள் வயோதிபர் இல்லம் மற்றும் சமூக சேவை அமைப்புக்கள் என்பவற்றுக் வழங்கப்படவுள்ளன.

இதில் அலுவலக உபகரணங்கள், கதிரை மற்றும் மேசைகள், ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளதாக திட்டமிடல் பணிப்பாளர் எம்.சிவராசா மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY