மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் அரையாண்டு பொலிஸ் பரிசோனை

0
199

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

bde2299e-cced-4025-abbb-6ac3963ba431மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் அரையாண்டு பொலிஸ் பரிசோனைகள் வியாழக்கிழமை (ஜுலை 21, 2016) காலை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி தினேஸ் கருணாநாயக்க மற்றும் பொலிஸ் அத்தியட்சகரும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான கீர்த்தி ரத்னாயக்க ஆகியோர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

பொலிஸாரின் அணிவகுப்பு, ஆயுதங்கள், வாகனங்கள், அலுவலகக் கட்டிடங்கள், மோப்ப நாய்கள் பொலிஸ் நிலையம் மற்றும் வளாகத்தில் உள்ள பௌதீக வளங்கள் உள்ளிட்ட யாவும் என்பனவற்றின் பராமரிப்பு தொடர்பாக பரிசோதிக்கப்பட்டதோடு பொலிஸாரின் சேமநலன்கள் பற்றியும் ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சி.ஐ. ஹெட்டியாராச்சி உள்ளிட்ட இன்னும் பல பொலிஸ் அதிகாரிகள் வருடாந்த பொலிஸ் பரிசோதனையில் கலந்து கொண்டனர்.

56f654fb-85ea-4bbd-b50a-69e79be7ee0b

c7db0128-6023-4f72-88af-b3be6bd17d9f

e86d06ed-bfde-46cf-a4a7-cc096236a816

LEAVE A REPLY