வவுனியாவில் நகைக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இளம் தம்பதி சிக்கினர்

0
135

Arrestதங்க நகை கொள்ளையில் ஈடுபட்டு வந்த இளம் தம்பதிகள் வவுனியா பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பிரதேச வீடொன்றில் குறித்த நகைகளைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற நிலையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, சந்தேகநபரான தம்பதிகள் வவுனியா பகுதியிலுள்ள வீடொன்றில் மூன்று சந்தர்ப்பங்களில் கொள்ளையிட்டுள்ளதாவும், அந்த நகைகளின் பெறுமதி ஐந்து இலட்சத்துக்கும் அதிகம் எனவும் கூறப்படுகின்றது.

மேலும், இவர்களால் கொள்ளையிடப்பட்ட ஆபரணங்கள் அடகு வைக்கப்பட்டு பணம் பெறப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் வவுனியா – சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதானவர்களாவர்.

இவர்களை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#Adaderana

LEAVE A REPLY