(Photos) கோயில் உற்சவத்திற்கு சென்று திரும்பிய இளைஞன் தொலைபேசி கம்பத்தில் மோதி மரணம்

0
120

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

IMG_0035களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இன்று (21) வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதி செட்டிபாளையத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் எருவில் கோடைமேடு பிரதேசத்தினை சேர்ந்த மா. டினேஸ்குமார் (19 வயது) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

தாந்தாமலை கோயில் உற்சவத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது அதிகவேகமாக அவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் இரண்டுபேர் பயணம் செய்தபோதிலும் பின்பக்கம் இருந்தவர் சிறிய காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.

சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_0031 IMG_0033 IMG_0037 IMG_0039

LEAVE A REPLY