ராம்குமார் சட்டையில் படிந்தது சுவாதியின் இரத்தமே: காவல்துறை தகவல்

0
130

201607202205536499_Ram-Kumar-of-Tshirt-stained-with-the-StumbleUpon-rattame_SECVPFஇந்தியாவில்சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி, கடந்த மாதம் 24-ந்தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த இந்த கொலை தொடர்பாக செங்கோட்டை மீனாட்சி புரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் தேவையான ஆதாரங்கள், சாட்சியங்களை போலீசார் சேகரித்து வைத்துள்ளனர்.

கொலை நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட சுவாதியின் ரத்த மாதிரிகள், ராம்குமார் விட்டுச் சென்ற ரத்தக்கறை படிந்த அரிவாள் மற்றும் ரத்தக்கறை படிந்த அவரது சட்டை ஆகியவை இந்த வழக்கில் முக்கிய தடயங்களாக உள்ளன. இவை அனைத்தையும் ரசாயன மற்றும் தடயவியல் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த தடயவியல் அறிக்கை சோதனையின் முடிவுகள் தற்போது கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், ராம்குமார் அணிந்திருந்த சட்டையில் படிந்து இருந்தது சுவாதியின் ரத்தமே என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டி.என்.ஏ சோதனையில் சுவாதியின் ரத்தம் என்பது உறுதியானது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வறிக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷன் அறையில் சட்டையை எடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்

LEAVE A REPLY