நரேந்திர மோடியின் பெயரிலான ”நரேந்திர மோடி வீடமைப்புக் கிராமம்” ஹம்பாந்தோட்டையில் ஆரம்பம்

0
144

(அஷ்ரப் ஏ சமத்)

065d80e5-eb9b-4ccc-b04c-8162113cbd31இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியின் பெயரிலான ”நரேந்திர மோடி வீடமைப்புக் கிராமம்” ஹம்பாந்தோட்டை திஸ்ஸமகரமாவில் அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் நேற்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் 315 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இந் நிகழ்வில் இந்திய துாதுவா் ஆலயத்தின் அதிகாரி ராஜ்குமாரும் கலந்து கொண்டாா். இத்திட்டத்திற்காக 789 இலட்சம் ருபா செலவிடப்படுகின்றது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கின்ற 42வது எழுச்சிக் கிராமமாகும். 2005 ஆம் ஆண்டு இலங்கை வந்த இந்தியப் பிரதமரிடம் பிரதமா், மற்றும் ஜனாதிபதி வீடமைப்புத்திட்டம் பற்றி பேசுகையில் சிங்கள மக்களுக்கான ஒரு நட்புரவு வீடமைப்புத் திட்டத்தினை தெற்கில் அமைப்பதற்கு கோரிக்கை விடுத்திருந்தனா். இதனை ஏற்றுக் கொண்ட பிரதமா் இத்திட்டத்திற்கு தான் உதவுவதாக வாக்குறுதி அளித்திருந்தாா்.

இவ் வீடமைப்புத்திட்டம் எதிா்வரும் நவம்பா் மாதத்தில் நிர்மாணப்பணிகள் புர்திசெய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கபடும். இத்திட்டத்திற்காக அரச காணிகள் சகல குடும்பங்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீடமைப்புக் கடன் மூலம் இத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இதில் நீரி, மின்சாரம், பாதை, மற்றும் சகல வசதிகளும் செய்த கொடுக்கப்டும். என அமைச்சா் சஜித் பிரேமதாச தெரவித்தாா்.

754b2ba1-8b11-43e6-8937-6dc17f8309c0

LEAVE A REPLY