உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு அடுத்த வாரம் முதல் ஒரு மாதம் தடை

0
135

school-examsஇம்முறை கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்பு, கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறை என்பவற்றை எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவுடன் நிறுத்திக்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி ஆகஸ்ட் 27ம் திகதி வரை இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.புஷ்பக்குமார தெரிவித்துள்ளார்.

குறித்த உத்தரவை மீறி வகுப்புகளை நடத்துபவர்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்துக்கோ அல்லது பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119னுக்கோ தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு அவர் கூறியுள்ளார்இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் 2ம் திகதி ஆரம்பமாகி 27ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY