மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களால் 202 கதிரைகள் அன்பளிப்பு

0
209

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

78787aa2-d630-47a0-9964-8219dfe2c288மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 202ஆவது ஆண்டு நிறைவையொட்டி அக் கல்லூரியின் 1998ஆம் ஆண்டு பழைய மாணவர்களால் கல்லூரிப் பாவனைக்கென 202 கதிரைகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டதாக பாடசாலை அதிபர் ஜே.ஆர்.பி. விமல்ராஜ் தெரிவித்தார்.

பாடசாலையின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (ஜுலை 20, 2016) நடந்த இந்நிகழ்வில் உரையாற்றிய மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் ஜே.ஆர்.பி. விமல்ராஜ், 202 வருடங்கள் பழமையான இப்பாடசாலை கிழக்கு மாகாணத்தில் முக்கியமானதொரு பாடசாலையாகத் திகழ்கின்ற போதும் பல்வேறு குறைபாடுகள், தேவைகளுடன் இயங்கிவருகின்றது. இதனைக்கருத்திற் கொண்டு இந்த கதிரைகள் தொகுதியை வழங்கி வைத்த பழைய மாணவர்களின் சேவை பாராட்டத்தக்கது.

இதே போல் ஏனைய பழைய மாணவர்களும் செயற்படுவது மேலும் கல்லூரியினை முன்னேற்ற உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.‪

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் ஆர். பாஸ்கர், பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் எஸ். சசிகரன், உப தலைவரும் இச்செயற்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் என். மௌலீசன், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் பொறியியலாளர் டி.ஏ. பிரகாஷ், சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் பொறியியலாளர் வை. கோபிநாத், மற்றும் 1998ஆம் ஆண்டு பழைய மாணவர்கள், பழைய மாணவர் சங்க அங்கத்தவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

1998ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் கடந்த வருடத்தில் மாணவர்களுக்கான பந்து வீசும் இயந்திரம் ஒன்றினை அன்பளிப்புச் செய்திருந்தனர். இதன் மூலம் கிரிக்கெற் பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்களின் பயிற்சிகளுக்கு அது ஏதுவாக உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

03d4585b-840c-4ead-896b-923ddd3dec84

85cb4982-950c-4deb-bec0-a1c5e4a90939

fa8a48c1-c534-469d-b300-935ffeb1e526

d33780ec-64fa-4906-880e-980f28122d56

LEAVE A REPLY