வந்தாறுமூளையில் சட்டவிரோதமாக தேக்க மரக்குற்றிகளை துவிச்சக்கர வண்டியில் கொண்டு வந்த நபர் சரீரப்பிணையில் விடுதலை

0
140

(விஷேட நிருபர்)

released_open_jailஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூளையில் சட்டவிரோதமாக தேக்க மரக்குற்றிகளை துவிச்சக்கர வண்டியில் கொண்டு வந்த நபர் சரீரப்பிணையில் நேற்று (19) விடுதலை செய்யப்பட்டுள்ளார் என ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

18.7.2016 திங்கட்கிழமை மாலை வந்தாறுமூளை உப்போடை வீதியில் வைத்து ஐந்து துவிச்சக்கர வண்டியில் தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிக் கொண்டு ஐந்து பேர் வந்துள்ளனர்.

இதன் போது நான்குபேர் தலைமறைவாகிய நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர் துவிச்கக்கர வண்டியில் கொண்டு வந்த தேக்கு மரக் குற்றிகளையும் ஏறாவூர் பொலிசார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பிள்ளையான் கிருஸ்னப்பிள்ளை என்பவரையும் அவர் கொண்டு வந்த தேக்குமரக்குற்றிகளையும் நேற்று(19.7.2016) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இருபதாயிரம் ரூபா சரீரப்பிணையில் சந்தேக நபர் விடுதலை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY