உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

0
124

missused words banக.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள், பிரத்தியேக வகுப்புகள், மாதிரி வினாத்தாள் விநியோகம் மற்றும் பயிற்சி பட்டறைகள் அனைத்தும் இம் மாதம் 27 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் ஆகஸ்ட் 27 ஆம் தகதிவரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விசேட விரிவுரைகள் மற்றும் வரிவுரைகள் தொடர்பாக ஊடகங்களின் மூலம் விளம்பரப்படுத்தும் செயற்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தடைகளை மீறும் பட்சத்தில் குறித்த குற்றங்களை புரியும் தனிநபர் அல்லது கல்வி நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY