(Photos) காத்தான்குடி தள வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை கூடம் உருவாக்கம்

0
67

(விஷேட நிருபர்)

Kattankudy Base Hospital 2காத்தான்குடி ஆதார வைத்திய சாலையின் சத்திரசி கிச்சைக் கூடம் இன்று (20) புதன்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டு சத்திர சிகிச்சைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் மற்றும் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் டாக்டர் ஆர்.டபிள்யு.றோகனகமகே உட்பட வைத்தியர்கள் மற்றும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது இன்றைய தினம் இருவருக்கு பெரியளவிலாள சத்திர சிகிச்சையும் நான்கு பேருக்கு சிறியளவிலான சத்திர சிகிச்சையும் மேற் கொள்ளப்பட்டன.

சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.டபிள்யு.றோகனகமகே தலைமையிலான வைத்தியர்கள் இந்த சத்திர சிகிச்சைகளை மேற் கொண்டதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக் கூடம் இருந்த போதிலும் அது செயற்படாமலிருந்த நிலையில் சத்திர சிகிச்சை நிபுனர் நியமிக்கப்பட்டதையடுத்து தற்போது இங்கு சத்திர சிகிச்சை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Kattankudy Base Hospital 1 Kattankudy Base Hospital 3 Kattankudy Base Hospital 4 Kattankudy Base Hospital 5

LEAVE A REPLY