ஒலுவில் துறைமுக கடலரிப்பினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்தை ஜனாதிபதி நேரில் சென்று பார்க்க வேண்டும்: கிழக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

0
824

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Naseer Hafisகிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இருக்கும் ஒலுவில் கிராமம் கடலரிப்பினால் மிகவும் மோசமாக அழிவடைந்து வருகிறது. இந்த அழிவுகளையும் மக்கள் படும் துயரத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் சென்று பார்க்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இன்று (20) புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஒலுவில் மக்களின் குடியிருப்புக்கள் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கடலுக்குள் சங்கமித்தும் பல கட்டிடங்கள் கடலில் மூழ்கியவாறும் உள்ளன.

Maithripalaஒலுவில் துறைமுக நிர்மாணிப்பின் பின்னர் ஒலுவில் கிராமம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு கடல் குடியிருப்புக்களை நோக்கிச் செல்வதால் அக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

அக்கிராமத்தில் அதிகமானோர் கடல் தொழிலையே ஜீவனோபாயமாக நம்பி வாழ்ந்து வந்தனர். ஆனால் கடலரிப்பினால் கிராம மீனவர்கள் தொழில் செய்ய முடியாத இக்கட்டான நிலைமைக்குள்ளாகி மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அத்துடன் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் குடியிருப்புக் காணிகள் கடலுக்குள் சென்று விட்டன. பல கட்டிடங்கள் இன்னும் கடலுக்குள் சங்கமித்த வண்ணமுள்ளன. இன்னும் தாமதமானால் மிகவும் மோசமான விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே குறித்த ஒலுவில் கிராமத்துக்கு ஜனாதிபதி நேரடியாகச் சென்று பார்வையிட்டு உடனடியாக அந்த மக்களுக்கான உதவிகளைச் செய்யவதற்கும் கடலரிப்பைத் தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Oluvil Harbour 1 Oluvil Harbour 2 Oluvil Harbour 3 Oluvil Harbour 4 Oluvil Harbour 5 Oluvil Harbour 6 Oluvil Harbour 7 Oluvil Harbour 9

LEAVE A REPLY