ஊழல் வழக்கில் 5 ஆண்டு தண்டனை பெற்ற பிலிப்பைன்ஸ் முன்னாள் பெண் அதிபர் விடுதலை

0
84

201607201209049723_5-year-sentence-on-corruption-charges-of-former-female_SECVPFபிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் பெண் அதிபர் குளோரியா மகாபாகல் அரோயா (69). இவர் கடந்த 9 ஆண்டுகள் அதாவது 2010ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

அப்போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசு லாட்டரியில் ரூ.52 கோடி ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. எனவே, அவர்மீது ஊழல் தடுப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கீழ் கோர்ட்டு அவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.

அதை எதிர்த்து அவர் சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு அவரை விடுதலை செய்தது. குற்றச்சாட்டுக்கான போதிய ஆதாரம் இல்லை என தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை அரோயா வரவேற்றுள்ளார்.

LEAVE A REPLY