(விஷேட நிருபர்)
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியில் காணாமல் போன மாணவி நேற்று (19) இரவு வீடு வந்து சேர்ந்துள்ளார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி-4ம் குறிச்சியைச் சேர்ந்த காத்தான்குடியிலுள்ள பெண்கள் பாடசாலையொன்றில் கல்விப் பொதுத்தரதர சாதரண தர வகுப்பில் கல்வி கற்கும் 16 வயது மாணவி கடந்த திங்கட்கிழமை (18) வழமை போன்று பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில் அவர் வீடு வராததால் மாணவியின் பெற்றார் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தனர்.
இதையடுத்து குறித்த மாணவியை தேடி வந்த நிலையில், குறித்த மாணவி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வீடு வந்து சேர்ந்ததாகவும்து இஒரு கடத்தல் விவகாரமல்ல எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரனைகளை நடாத்தி வருகின்றனர்.