காத்தான்குடி மாணவி காணாமல் போன விவகாரம்: மாணவி வைத்தியசாலையில்; குடும்பஸ்தர் ஒருவர் கைது!

0
101

(விஷேட நிருபர்)

zajil add muslim girl student arrநேற்று முன்தினம் (திங்கள்-18) காத்தான்குடியில் காணாமல் போன மாணவி நேற்று (19) இரவு வீடு வந்து சேர்ந்த செய்தியை இன்று நாம் பதிவு செய்திருந்தோம்.

இந்நிலையில் குறித்த மாணவியை அழைத்துச் சென்றார் என சந்தேகிக்கப்படும் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (20) காத்தான்குடி பொலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று குறித்த மாணவியை தாம் விசாரித்ததாகவும் அதன் பின்னரே சந்தேகத்தின் பேரில் குடும்பஸ்தர் ஒருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலீஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மருத்துவ பரிசோதனைக்காக மாணவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்   அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி-4ம் குறிச்சியைச் சேர்ந்த காத்தான்குடியிலுள்ள பெண்கள் பாடசாலையொன்றில் கல்விப் பொதுத்தரதர சாதரண தர வகுப்பில் கல்வி கற்கும் 16 வயது மாணவி கடந்த திங்கட்கிழமை (18) வழமை போன்று பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில் அவர் வீடு வராததால் மாணவியின் பெற்றார் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தனர்.

இதையடுத்து குறித்த மாணவியை தேடி வந்த நிலையில், குறித்த மாணவி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வீடு வந்து சேர்ந்ததாகவும்த ஒரு கடத்தல் விவகாரமல்ல எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்திருந்தமை குறிப்படதத்தக்கது.

LEAVE A REPLY