குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரானார் ட்ரம்ப்

0
142

Cobb-TrumpinNewHampshire-1200 (1)அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

கிளீவ்லாண்டில் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு ட்ரம்ப்பை தனது வேட்பாளராக அங்கீகரித்தது.

மாநாட்டில் பேசிய ட்ரம்ப் கட்சியின் வேட்பாளராக அதிபர் தேர்தலுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதில் தான் மிகுந்த பெருமை கொள்வதாகக் கூறினார்.

தேர்தலில் தான் வெற்றி பெறப்போவதாகக் கூறிய ட்ரம்ப், வாஷிங்டனில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவருவேன் என்று கூறினார்.

நவம்பர் தேர்தலில் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக ட்ரம்ப் அறிவிக்கப்பட்டதை அடுத்து வீடியோ மூலம் அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையின் சபாநாயகர், பால் ரையான், கட்சியினர் ட்ரம்ப்புக்குப் பின்னால் அணி திரள வேண்டும் என்று கோரினார்.

அனைத்து குடியரசுக் கட்சியினரும் ஒன்றுபட்டால்தான், ட்ரம்ப்பின் வெற்றி உறுதியாகும் என்றும், நாடாளுமன்ற அவைகளில் குடியரசுக் கட்சிக்குள்ள தற்போதைய பெரும்பான்மையுடன், வெள்ளை மாளிகையையும் பிடிப்பதைக் கட்சியினர் தமது இலக்காகக் கொள்ளவேண்டும் என்றார் ரையான்.

#BBC

LEAVE A REPLY