யாழ் .பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பம்

0
167

VC Vasanthi Arasaretnamயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகள் இன்று முதல் மீண்டும் படிப்படியாக ஆரம்பமாகவுள்ளன. வவுனியா வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் கிளிநொச்சியிலுள்ள விஞ்ஞான, பொறியியல் பீடங்களின் செயற்பாடுகள் முழுமையாக ஆரம்பிக்கப்படவிருப்பதாக யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்னம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் கூடிய பல்கலைக்கழக மூதவை (செனற்) கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ பீடம் மற்றும் சித்த மருத்துவ அலகின் கல்வி செயற்பாடுகளும் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன.

கலைப்பீடத்தின் பரீட்சைகள் குறிப்பாக சங்கீதம், நடனம், சித்திரம் ஆகியவற்றின் செயன் முறைப் பரீட்சைகள் நடைபெற வேண்டியுள்ளன. இவற்றை எதிர்வரும் 25ஆம் திகதி நடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஏனைய பீடங்களின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பது பற்றி ஓரிரு தினங்களில் முடிவெடுக்க விருப்பதாகவும், இது தொடர்பில் சகல பீடாதிபதிகளுடனும் கலந்துரையாடப்படும் என்றும் உபவேந்தர் வசந்தி அரசரட்னம் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை விஞ்ஞானபீடத்துக்கான புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#Thinakaran

LEAVE A REPLY