(Photos) கங்கேயனோடை ஈரான் சிட்டி மாவிலங்கதுறை பகுதியில் கைக்குண்டு அடங்கலாக வெடி பொருட்கள் மீட்பு

0
145

(முஹம்மட் பயாஸ்)

WhatsApp-Image-20160719 (3)காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்கேயனோடை ஈரான் சிட்டி மாவிலங்கதுறை பகுதியில் தமிழர் ஒருவருக்குச் சொந்தமான காணி ஒன்றில் இருந்து SFJ7 ரக கைக்குண்டு ஒன்றும் பழுதடைந்த நிலையிலான சயனைட் குப்பி ஒன்றும் த.வி.பு என பொறிக்கப்பட்ட அடையாள இலக்க தகடு ஒன்றும் பழுதடைந்த நிலையில் அடையாளம் காண முடியாத அடையாள அட்டை ஒன்றும் இன்று (19) பி.ப. 4.00 மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்காணிக்குச் சொந்தமான T.தவேந்திரன் என்பவர் காணியை துப்பரவு செய்து கொண்டிருக்கும் வேளையிலேயே இப்பொருட்களை கண்டதும் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிசார் இரானுவத்தினரின் உதவியுடன் இப்பொருட்களை பரீட்சித்து அதனை சம்பவ இடத்திற்கு முன்னாள் உள்ள வெட்ட வெளி ஒன்றில் இரானுவத்தினரால் செயளிலக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அப்பகுதியில் பொலிசாரும் இரானுவத்தினரும் மேலும் தேடுதல் வேட்டையினை மேற்கொண்டதாகவும் இவ்வெடிபொருட்கள் தமீழில விடுதலைப் புலிகளினுடையதாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மேலதிக விசாரனைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

WhatsApp-Image-20160719 (1) WhatsApp-Image-20160719 (2) WhatsApp-Image-20160719 (4) WhatsApp-Image-20160719 (6) WhatsApp-Image-20160719

LEAVE A REPLY