பஸ் கட்டணம் அதிகரிப்பு

0
168

CTBஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து இலங்கை போக்குவரத்து சபை பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து பிரதியமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே பிரதியமைச்சர் இதனைக் கூறினார்.

ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து பஸ் கட்டணம் 6 வீதத்தால் அதிகரிக்கப்படும். அதன் படி ஆக்குறைந்த எட்டு ரூபா கட்டணம் ஒன்பது ரூபாவாக அதிகரிக்கப்படும். 2012 ஆம் ஆண்டு பஸ் கட்டணம் 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டது. கடந்த அரசாங்கத்தின் போது குறிப்பாக 2013 ஆம் ஆண்டு 8 வீதத்தால் அதிகரிக்கப்பட்டது. எனினும் 100 நாள் திட்டத்தின் போது நாம் ஆகக்குறைந்த கட்டணத்தை 8 ருபாவாக குறைத்தோம். தற்போது 9 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த அரசாங்கத்தின் போது ஆகக்குறைந்த கட்டணம் 10 ரூபாவைவிட அதிகரித்து காணப்பட்டது. தற்போதை நிலைமையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. அதன்படி இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் கட்டணம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிகப்படவுள்ளது.

-NF-

LEAVE A REPLY