(Article) துருக்கிய இராணுவப்புரட்டசிக்கு பின்னால்….

0
291

 (ஜுனைட் நளீமி)

a629c63e-9041-41ed-b0fc-8f500dbb1a6cதோல்வியில் முடிந்த துருக்கிய அர்துகான் அரசுக்கெதிரான இராணுவ கிளர்ச்சியில் 265பேர் கொல்லப்பட்டதுடன் 1440பேர் காயமைந்துள்ளனர். 06 இராணுவ ஜெனரல்கள் உள்ளிட்ட 2839 கிளர்ச்சி இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.2745 நீதித்துறை நீதிபதிகளும் சட்டவாறிஞ்சர்களும் பதவி விளக்கப்பட்டுள்ளனர். துருக்கிய இராணுவ வரலாற்றில் இது ஐந்தாவது இராணுவ புரட்ச்சி நடவடிக்கையாக அமைந்துள்ளது.

தோல்வியில் முடிந்த இராணுவ கிளர்ச்சிக்குப் பின்னால் உள்ள சக்திகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அர்துகான் அரசுக்கு எதிராக செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆன்மிக போதகர் குலான் மீதும் அவரது ஹிஸ்மத் அமைப்பின் மீதும் அர்துகான் அரசினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குலானியை ஹிஸ்மத் அமைப்பு.
கிளர்ச்சி ஆரம்பமானதாக அறிவிக்கப்பட்ட மறு நிமிடத்திலிருந்து அர்துகான் அரசு குலான் மீது குற்றச்க்காட்டை முன்வைத்தது. தற்போது அமெரிக்க தன்சால்வேனியாவில் நாடுகடந்த வாழும் குலான் துருக்கிய அரசின் குற்றச்சாட்டை மறுப்பதுடன் ஜனநாயகத்தை நிலைநாட்ட எந்தவொரு வன்முறைப்புறடசியும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிக்கை விட்டிருந்ததுதடன் இராணுவ கிளர்ச்சி தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய சதி முயற்சி

துருக்கிய இராணுவ கிளர்ச்சிக்குப்பின்னால் இஸ்ரேல் செயற்பட்டுள்ளதாக சில இஸ்ரேலை தலமாக கொண்டு செயற்படும் சில ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன. ஏனெனில் புரட்சிக்கு தலைமை தாங்கியவர்களில் ஜெனரல் ஆகின் ஒஸ்டார்க் இஸ்ரேலுக்காக பணிக்கமர்த்தப்பட்டவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் 1990களில் துருக்கிய வான்படை கட்டளை தளபதியாக செயற்பட்டதுடன் 1998 தொடக்கம் 2000ம் ஆண்டுவரை இஸ்ரேலின் டெலவிவில் அமைந்துள்ள துருக்கிய தூதரகத்தில் பணியாற்றியுள்ளார். அத்துடன் கடந்த வருடம் அவர் வான்படை தளபதி என்ற நிலையில் இருந்து பதவி இரக்கம் செய்யப்பட்டு தொடர்ந்து இராணுவ சுப்ரிம் கவுன்சிலின் உறுப்பினராக செயற்பட்டு வந்துள்ளார்.

இராணுவ கிளர்ச்சி இடம்பெற்று தோழ்வியடையும் தருவாயிலிலேயே இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை எதிர்ப்பதாக அறிக்கை விட்டிருந்தது. தொடர்ந்தும் பாலஸ்தீனத்தின் மீதும் ஹமாஸ் மீதும் அர்துகான் அரசு ஆடஹரவு நிலை தெரிவிப்பது இஸ்ரேலினால் சகிக்க முடியாத ஒரு விடயமாகும். இதே வேலை துருக்கிய இராணுவ புரட்ச்சி முறியடிப்பு இஸ்ரேலிய துருக்கிய நல்லிணக்க செயற்பாட்டிற்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தாது என தெரிவித்திருப்பது புரடசி தொடர்பில் இஸ்ரேல் மீதான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க பின்புலம்

துருக்கிய இராணுவ சாதிப்புரட்ச்சியில் அமெரிக்காவின் மறைக்கரம் செயற்படுவதாக துருக்கிய அரச தரப்புக்கள் கருத்து தெரிவிக்கின்றன. என்ற போதும் கிளர்ச்சி இடம்பெற்ற வேலை அமெரிக்க தூதரகம் தமது நாட்டுப்பிஜைகளுக்கு பிரயாண எச்சரிக்கை விடுத்ததுடன் அங்காரா தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கும் கிளர்ச்சி பரவலாம் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் உற்கருத்து குறித்த சந்தேகத்தின் பேரில் அர்துகான் தொடர்ந்தும் மக்களை வீதிகளில் நிண்டு ஆதரவு தெரிவிக்குமாறு வேண்டிக்கொண்டதுடன் மீட்பு நடவடிக்கை முடிவடைந்ததாக அரசு அறிவிக்கும் வரை களைந்து செல்ல வேண்டாம் என அறிவித்தல் விடுத்திருந்தது.

துருக்கியின் இன்சிர்லிகில் அமைந்துள்ள அமெரிக்க விமான தளத்தை அரசு உடனடியாக முடியாது. குறித்த தளம் இராக் மற்றும் சிரியா களமுனையில் செயற்படும் அமெரிக்க துருப்பினருக்கு உதவியாக தாக்குதல் நடாத்த அமெரிக்க இராணுவத்தினால் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. விமானத்தளத்தை மூடுவதன் மூலம் அமெரிக்க அரசின் மீது தமது மாறு நடவடிக்கையை வெளிப்படுத்துவதாக அமைந்தது. எனவேதான் பராக் ஒபாமா குறித்த விடயம் தொடர்பில் பேசப்படும் என அறிக்கை விட்டிருந்தார்.

அத்தோடு பராக் ஒபாமா கிளர்ச்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக துருக்கிய உத்தியோக பூர்வ அரசு முதற்தடவையாக அறிவித்தல் விடுக்கும் வரை துருக்கிய மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசுக்கு ஆதரவு வழங்குமாறு அனைத்து தரப்புக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்வறிவிப்பைத்தொடர்ந்தே அமெரிக்க சார்பு நாடுகளான இஸ்ரேல், மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் அர்துகான் அரசுக்கு ஆதரவு தெரிவித்து புரட்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாதென அறிவித்தல் செய்தன.

மறுபுறம் கிளர்ச்சியின் ஆரம்ப கட்டம் முதல் அர்துகான் அமெரிக்க வென்ஸில் வேனியாவில் வசிக்கும் குலான் அவர்கள் மீது கண்டனத்தை தெரிவித்த போதும் குலானது ஆடசிக்கவிழ்ப்பு முயற்சிக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதாக மறைமுகமாக குறிப்பிட்டது. குலான் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் ஆடஹரன்கள் முன்வைக்கப்படுமானால் குலானை துருக்கிக்கு திரும்பவும் ஒப்படைப்பது தொடர்பில் சட்ட நெறிமுறைகளை ஆராய முடியும் என அமெரிக்க தெரிவித்திருப்பது பல கேள்விகளை முன்வைப்பதாக அமைந்துள்ளதுடன் துருக்கிய அரசு சட்டத்தை அமுல்நடாத்த வேண்டும் என அறிக்கை விடுத்துள்ளமையும் கவனித்தக்கது.

இதே வேலை இராணுவ கிளர்ச்சிக்கு முன்னிரவிலேயே அமெரிக்க தூதரும் ரஷ்ய தரப்பும் ரஷ்யாவில் விசேட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தமை இராணுவ கிளர்ச்சி வெற்றி பெருமானால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வதாக அமிடன்ஹிருக்கும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

துருக்கிய அர்துகான் அரசுக்கு சாதகமாக அமைந்த காரணிகள்.

இராணுவப்புரட்ச்சி தோல்வியில் முடிவதற்கு பல்வேறு தரப்பும் காரணிகளாக அமைந்துள்ளன. குறிப்பாக துருக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைந்து இராணுவ புரட்ச்சியை எதிர்த்தமை விஷேட அம்சமாகும். ஏனெனில் கடந்தகால இராணுவ புரடசிகளின் போது மக்கள் எதிர்பார்த்த எவ்வித ஜனநாயக மற்றும் பொருளாதார விடிவுகள் கிடைக்கப்படவில்லை என்பது முக்கிய விடயமாகும். அத்தோடு எகிப்திய மக்களைப்போன்றல்லாது துருக்கிய மக்கள் கல்வி விழிப்புணர்வுள்ள மக்கள் மாத்திரமன்றி சமகால உலகு தொடர்பான பரந்த அறிவுடையவர்களாக காணப்படுகின்றனர்.

ஐரோப்பிய நோயாளி என்ற அவப்பெயரில் இருந்து விடுபட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடாக இணைந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு துருக்கிய மக்களிடம் கூடுதலாக காணப்படுகின்றது. எனவே அரபுல அல்லது ஆபிரிக்க இராணுவப்புரடசிகள் அந்நாடுகளை விளிம்பு நிலைக்கு கொண்டு சென்றுள்ளமையை நன்கு விளங்கியுள்ளனர்.

எனவேதான் எகிப்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப்புரட்ச்சியும் மக்கள் எதிர்ப்பு நசுக்கப்பட்டமை தொடர்பில் பல விடயங்களை அர்துகான் அரசு நன்கு புரிந்திருந்தமையால் துருக்கியிலிராணுவப்புரட்டசிக்கெதிராக மக்களை சரியாக வழிநடாத்த முடிந்தது.

அனைத்து அரசியல் கடசிகளதும் அரசியல் தலைவர்களதும் ஒத்துழைப்பும்.

இராணுவம் ஆடசியைக்கைப்பற்றுமானால் ஜனநாயக ரீதியான எந்தவொரு காட்ச்சிக்கும் ஆடசியமைப்பதற்கான அவகாசம் இல்லை என்பதனை ஏனைய அரசியல் தலைமைகளும் நன்கு விழுங்கி இருந்தன. அத்தோடு கடந்த கால இராணுவ பிரட்ச்சியில் ஆதரவு னழகிய எந்தவொரு காட்ச்சியும் மீண்டும் மக்களால் ஆடசிக் கதிரையில் அமர்த்தப்படவில்லை என்பது வரலாறு. அதே போன்று இராணுவ புரட்ச்சி தோழ்வியுறும் பட்சத்தில் தாமும் அரசியல் பழிவாங்களுக்குற்படலாம் என்ற அச்சமும் இல்லாமலில்லை.

ஊடகங்களின் பங்களிப்பு.
கடந்த இரண்டு வருடங்களாக அர்துகான் அரசு ஊடகங்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் துருக்கியின் உடைக்க சுதந்திரம் குறித்த கேள்விகளை சர்வதேசத்தில் எழுப்பியிருந்தது. என்ற போதும் இராணுவ புரட்ச்சி மேற்கொள்ளப்பட்ட வேளையில் அரசுக்கு சார்பாக பல்வேறு ஊடகங்களும் செயற்பட்டமை குறித்த கருத்து தொடர்பில் மீள்வாசிப்பினை ஏற்படுத்த தூண்டியுள்ளது. உண்மையில் ஹிஸ்மத் அமைப்புக்கு சொந்தமான பல ஊடகங்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குர்திஸ்தான் மக்களது அமைதிப்போக்கு

இராணுவப்புரட்ச்சி இடம்பெற்ற வேளையில் குர்திக்கள் இராணுவ ஆடசிக்கெதிராக செயற்பட வேண்டி இருந்தது. ஏனெனில் இராணுவ ஆடசி இடம்பெறுமானால் தாம் கடுமையாக நசுக்கப்படுவோம் என்ற அச்சம் மேலோங்கி காணப்பட்டது. எனவே குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிப்பது அறிவு பூர்வமானதாக குர்தின கட்ச்சிகள் கருதவில்லை.

அர்துகான் – குலான் மோதல்
நூர்சி இயக்கத்தின் செல்வாக்கு குலான் இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஒத்து இயங்குபவையாக அமைந்திருந்ததனை அவதானிக்க முடிகின்றது. என்ற போதும் குலான் அவர்களின் ஹிஸ்மத் இயக்கம் கல்வி மற்றும் ஊடக திறன்களை தமக்கு சாதகமாக்கி கொண்டதினூடாக துருக்கிய சமூக மட்டத்தில் தனிச்செல்வாக்கை வளர்த்தெடுப்பதற்கு வாய்ப்பாக அமைந்தது. குலானின் அரசியல் அதிகாரம் குறித்த தலையிடாக் கொள்கை ஆட்சியாளர்களுக்கு அச்சுறுத்தலாக அமையாததன் விளைவாக குலான் இயக்கம் தொடர்ந்தும் வளர்ச்சி பெற வாய்ப்பாக அமைந்தது.

இத்தகைய பின்னணி இஸ்லாமிய இயக்கங்கள் துருக்கியில் மெது மெதுவாக செயற்பட வழியமைத்தன. என்ற போதும் பொலிடிகல் இஸ்லாம் என்ற நவீனத்துவ இஸ்லாமிய சிந்தனை துருக்கியிலும் காலூன்ற ஏதுவாகியது. அர்பகான் தலைமையிலான ரபா கட்சி பல இழப்புக்களை சந்தித்து நவீன துருக்கியை நோக்கி துருக்கிய சமூகத்தை தள்ளியது.

உண்மையில் இஸ்லாமிய அரசு என்ற கோட்பாடும் ஷரியத் என்ற சொல்லாடல்களும் அர்பகானுக்கெதிராக முன்வைக்கப்பட்டது. இத்தகைய குற்றச்சாட்டுக்கள் துருக்கியின் விளிம்பு நிலை சமூகத்தில் அர்பகானுக்கெதிரான எதிரலைகளைத் தோற்றுவித்தது. குலான் அமைப்பும் Pடரசயடளைவiஉ ளுழஉநைவல என்ற பன்மைத்துவ சமூகத்தில் அனைத்து இனக்குழுமங்கலதும் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டே அரசு அமைய வேண்டும். இதனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது என குலான் இயக்கம் கருதுகின்றது.

எனவே குறித்த மதத்தினரின் அல்லது ஒரு பகுதியினரை மாத்திரம் அடையாளப்படுத்தினால் அது உண்மையான இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையாது என்ற சிந்தனை அர்;பகானுக்கும் குலான் அமைப்பிக்கும் இடையில் பிரிகோடாக அமைந்தது. அர்பகானின் தொடரில் அர்துகான் ஆட்சிபீடமேறிய போதும் குலான் அமைப்பின் விமர்சனங்களுக்கப்பாலும் மேற்கின் விமர்சனங்களுக்குள் இருந்தும் தப்பித்துக்கொள்வதற்காக கவனமாக இஸ்லாம், ஷரியா என்ற பதங்களை முதன்மைப்படுத்துவதை விட்டும் அவற்றின் அடிப்படைகளை நடைமுறைப்படுத்துவதில் வெற்றி கொண்டுள்ளதை காணமுடிகின்றது.

இதன் மூலம் துருக்கிய தேசிய வாதத்துடன் இணைந்ததான துருக்கிய கலாச்சார மரபுகளை பக்குவமாக இஸ்லாமிய மயப்படுத்தலுக்கு உட்படுத்த மேற்கொள்ளும் உள்ளார்ந்த முயற்சிகளுக்கு விமர்சனங்களும் எழாமல் இல்லை. பன்மைத்துவ சமூகத்தில் அரசு பன்மைத்துவ சட்ட விதிகளை கொண்டிருக்க வேண்டும் என்ற குலான் அமைப்பின் கொள்கைக்கும் பொலிடிகல் இஸ்லாம் என்ற சிந்தனை முகாமில் வெளிவந்த அர்துகானின் இஸ்லாமிய சட்ட ஒழுங்கே முதன்மைப்படுத்தப்படவேண்டும் என்ற கருத்துக்கும் இடையிலேயே இன்றைய துருக்கி அரசியல் சிக்கித்து தவிப்பதனை காண முடிகின்றது.

இஸ்லாம் , அரசியல் தொடர்பாக இரு சிந்தனை முகாம்களுக்கிடையிலான மோதலாகவே இது நோக்கப்பட வேண்டும். அரசு என்பது ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் நடைமுறைப்படுத்தும் அமைப்பே தவிர இஸ்லாமிய சட்ட உருவாக்க சபையல்ல என்பதுவே குலானின் கருத்தாக உள்ளது. இஸ்லாத்தின் 95மூமான சட்டங்கள் தனிநபர் வாழ்வு, குடும்ப வாழ்வு பற்றியே பேசுகின்றது. 5மூமானவை மட்டுமே அரசோடு தொடர்பு பட்டதாக அமைகின்றது என குலான் சிந்தனை குறிப்பிடுகின்றது.

பன்மைத்துவ அங்கீகாரத்திற்கு எதிரான கருத்தாகவே குலான் இஸ்லாமிய அரசு அல்லது இஸ்லாமிய அரசியல் என்ற கருத்தை நோக்குவதனை காணமுடிகின்றது. எனவேதான் அர்துகான் துருக்கிய கிலாபத்தை ஒழிக்க இஸ்லாமிய பெயர்தாங்களில் மேற்கினால் உருவாக்கப்பட்ட லோரன்ஸ் என்பவனது வாரிசுகளாக (லோரன்ஸ் ஒப் அரேபியாஸ்) பலர் துருக்கிய இஸ்லாமிய எழுச்சியை ஒடுக்குவதற்காக மேற்கினால் உருவாக்கப் பட்டுள்ளதாக அர்துகான் குலான் முகாம் மீது குற்றம் சுமத்துவதனை காணமுடிகின்றது. இத்தகைய இஸ்லாம், அரசியல் பற்றிய புரிதலுக்கான முரண்பாடுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மேற்கு துருக்கிய அரசியலில் உள்ளக முரண்களை மேலும் பூகோள மயப்படுத்த முனைவதனை காண முடிகின்றது.

இத்தகைய சாதக பாதகங்களுக்கப்பால் அர்துகான் அரசு தனது கடந்த கால மாற்றுக்கருத்துக்களுக்கெதிரான செயற்பாட்டிலும் ஊடகத்துறை சார்ந்த செயற்பாட்டிலும், எதிர்க்கட்ச்சிகள் குறித்த வாசிப்பிலும் மீள்வாசிப்பு செய்ய வேண்டியுள்ளதனை குறித்த சாதக பாதக அம்சங்கள் தெளிவு படுத்துகின்றன.

எவ்வாறிருந்த போதும் அர்துகான் தனது கொளகைக்கெதிராக பெரும் சவாலாக காணப்பட்ட மதச்சார்பற்ற சிந்தனை கொண்ட இராணுவ தலைமைகளையும் இராணுவத்திற்கு ஒத்திசைக்கும் நிதித்துறையையும் களையெடுப்பு செய்வதற்கான சந்தர்ப்பமாக இக்கிளர்ச்சி அமைந்த போதும் சர்வதேசத்தில் துருக்கியின் நிதித்துறை சார்ந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு விமர்சனங்களும் ஏற்பட வாய்ப்பாக அமையும் என்பது திண்ணம்.

LEAVE A REPLY