பாடசாலை சென்ற காத்தான்குடி மாணவி வீடு வந்து சேரவில்லை

0
218

(விஷேட நிருபர்)

muslim girl student missing zajilகாத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த மாணவியொருவர் பாடசாலைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி4ம் குறிச்சி குபா பள்ளிவாயல் வீதியை சேர்ந்த காத்தான்குடி மில்லத் மகளிர் பாடசாலையில் கல்விப் பொதுத்தரதர சாதரண தர வகுப்பில் கல்வி கற்கும் 16 வயதுடைய என்.பாத்திமா தஸ்னீக்கா எனும் மாணவி நேற்று (18) வழமை போன்று பாடசாலைக்கு சென்றுள்ளார்.

குறித்த மாணவி இதுவரை வீடு வந்து சேரவில்லையென குறித்த மாணவியின் பெற்றார் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த மாணவியுடன் கல்வி கற்கும் சக வகுப்பு மாணவிகள் பாடசாலை முடிந்து வீடு வந்து சேர்ந்த போதிலும் மேற்படி மாணவி இது வரை வீடு வந்து சேரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படி மாணவி பாடசாலை சீருடையுடன் வீட்டை விட்டு பாடசாலைக்கு செல்வதாக கூறி சென்ற போதிலும் குறித்த மாணவி பாடசாலைக்கு செல்லவில்லையெனவும் பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின.

LEAVE A REPLY